மத்திய அமைச்சர் எல். முருகன் ராஜினாமா! கட்சிப் பணியில் முழுநேரமாக ஈடுபட முடிவு?

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தனது அமைச்சர் பதவி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த எல். முருகன், கட்சியை வலுப்படுத்தும் பணியில் முழுநேரமாக ஈடுபட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐந்து பக்கக் கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல். முருகனின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. அவரது ராஜினாமா தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாக வேண்டியுள்ளது.