ஓணம் கொண்டாட்டத்தில் களைகட்டிய புலிக்கலி! புலி வேடத்தில் ஆடி அசத்திய கலைஞர்கள்!

கேரளாவின் பாரம்பரிய கலை நிகழ்ச்சியான புலிக்கலி, ஓணம் பண்டிகையையொட்டி திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான கலைஞர்கள் தங்களது உடலில் மஞ்சள், சிவப்பு, கருப்பு உள்ளிட்ட வண்ணங்களில் புலி மற்றும் சிறுத்தையின் வடிவங்களை வரைந்து, பாரம்பரிய இசை மற்றும் மேள தாளங்களுக்கு ஏற்ப நடனமாடினர்.
பல மணி நேரம் செலவிட்டு உடலில் வண்ணம் தீட்டி தயாராகும் கலைஞர்கள், திருச்சூர் வீதிகளில் புலி வேடத்தில் ஆடியது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
ஓணம் திருவிழாவின் இறுதிக்கட்ட கொண்டாட்டங்களில் முக்கிய இடம் பெறும் இந்த புலிக்கலி, கேரளாவின் பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வண்ணமயமான நிகழ்ச்சியாக அமைந்தது.