கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக, தமிழகத்திற்கு நீர்ப்பங்கீட்டில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியும், சட்டத்திற்கு உட்பட்டும் மேகதாது அணையைக் கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கும் என அவர் கூறியுள்ளார்.
மேலும், மேகதாது அணை கட்டப்படுவதால் தமிழகத்திற்கும் நீர்ப்பங்கீட்டில் நன்மை கிடைக்கும் எனத் தெரிவித்துள்ள அவர், இந்த விவகாரத்தில் இரு மாநிலங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதலமைச்சரின் இந்தக் கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.










Leave a Reply