தேர்தல் பரப்புரையின்போது உங்களை மிகவும் விமர்சித்துப் பேசியதற்காக, பின்னர் “I am sorry சார்” என்று கூறியதை நான் மனதில் வைத்துக் கொள்ளவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
யாரைப் பற்றி பேசினாலும் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்று அப்போது அறிவுறுத்தியதாகவும், அதை தற்போது மறந்துவிட்டீர்கள் போல தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
முதல்வர் பதவிக்கான கண்ணியத்துடன் வார்த்தைகளும் உடல்மொழியும் இருக்க வேண்டும் என்றும், நாம்தான் மக்களுக்கு முன்னுதாரணம் என்பதால் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டமன்றத்தை ரீல்ஸ் எடுக்கும் இடமாக மாற்றி, திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலத்தில் நின்று போட்டோஷூட் செய்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.










Leave a Reply