தமிழ்நாடு சட்டமன்றத்துக்கென்று ஒரு மாண்பும் மரியாதையும் இருக்கு!” – முதலமைச்சர் விஜய்க்கு அறிவுரை

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு,  முன்னாள் முதலமைச்சர் Mk. ஸ்டாலின் ஒருவர் சட்டமன்றத்தின் மாண்பை காக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
முதலமைச்சர் விஜய் தன்னை சந்திக்க வீட்டிற்கு வந்தபோது, தேர்தல் பிரசாரத்தில் தன்னை கடுமையாக விமர்சித்து பேசியதற்காக “I am sorry சார்” என கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அப்போது, அந்த விமர்சனங்களை மனதில் வைத்துக் கொள்ளவில்லை எனத் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், “நீங்கள் தற்போது ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். யாரைப் பற்றி பேசினாலும் அந்த கண்ணியத்துடன் பேச வேண்டும்” என அப்போதே அறிவுரை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்திற்கென தனி மாண்பும் மரியாதையும் இருப்பதால், தேவையற்ற சர்ச்சைகளை சட்டமன்றத்தில் பேச வேண்டாம் என்பதே தனது கோரிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“அப்போது சொன்னதை எல்லாம் முதலமைச்சர் விஜய் மறந்துவிட்டார் போல!” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.