கொளப்பள்ளி அருகே மினி பேருந்து விபத்து – இருசக்கர வாகன ஓட்டுநர் பலத்த காயம்!

கொளப்பள்ளி முதல் அய்யன்கொல்லி செல்லும் சாலையில் இன்று (10.09.2026) மினி பேருந்தும், இருசக்கர வாகனமும் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவர் பலத்த காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கொளப்பள்ளி–அய்யன்கொல்லி சாலை மிகவும் குறுகலாக இருப்பதால், ஒரே நேரத்தில் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவுக்கு சாலை இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த சாலையை விரிவாக்கம் செய்து, விபத்துகளைத் தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பலமுறை நெடுஞ்சாலைத் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து விபத்துகள் ஏற்படாமல் இருக்க, சாலையின் நிலையை ஆய்வு செய்து உடனடியாக சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.