ஆசிரியர் கண்டித்ததால் 11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை? நாகர்கோவிலில் மாணவர்கள் மறியல்!

நாகர்கோவிலில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பள்ளியில் தன்னுடன் படிக்கும் மாணவியிடம் சிரித்து கலகலப்பாக பேசியதாக கூறப்படும் நிலையில், ஆசிரியர் கண்டித்ததால் மாணவன் மனவேதனை அடைந்ததாக அவரது தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தக் கோரி சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர் கண்டித்ததற்கும் மாணவனின் உயிரிழப்புக்கும் நேரடி தொடர்பு உள்ளதா என்பது விசாரணையின் மூலம் தெரியவரும்.