கோவை சரவணம்பட்டியில் பரபரப்பு!

கோவை சரவணம்பட்டி பகுதியில் புதிதாக வாங்கி ஷோரூமில் இருந்து எடுத்து வந்த TVS Jupiter இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய வாகனத்தை ஷோரூமில் இருந்து எடுத்துக்கொண்டு வந்த அடுத்த சில நொடிகளிலேயே தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த உரிமையாளர் உடனடியாக வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
சிறிது நேரத்தில் தீ வேகமாகப் பரவி வாகனத்தின் முக்கிய பாகங்கள் சேதமடைந்ததாக தெரிகிறது. புதிதாக வாங்கிய வாகனம் உடனடியாக தீப்பிடித்ததால் உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நிறுவனத்தின் தரப்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.