சென்னை சென்ட்ரலில் புதிய RPF முச்சக்கர வாகன சேவை! கொடியசைத்து தொடங்கி வைத்த DG/RPF

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில் நிலைய கண்காணிப்பு பணிகளை மேலும் மேம்படுத்தும் வகையில், RPF எனப்படும் ரயில்வே பாதுகாப்புப் படையின் முச்சக்கர வாகனச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சேவையை ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் (DG/RPF) அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
முச்சக்கர வாகனங்கள் மூலம் ரயில் நிலைய வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ளவும், அவசர நேரங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கவும் இந்த சேவை உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த புதிய முயற்சி அமைந்துள்ளது.