குப்பை கூடாரமாக மாறிய வீரபாண்டி! சுகாதார சீர்கேட்டில் No.4 பேரூராட்சி – நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்?

கோவை மாவட்டம் No.4 வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் சாலையோரங்களில் குவிந்து கிடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பிரஸ் காலனி செல்லும் வழியில், குப்பைகள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால் அந்தப் பகுதியே குப்பைக் கூடாரமாக காட்சியளிக்கிறது.
குப்பைகள் முறையாக அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் இருப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள ஹெட் கிளர்க்கிடம் பொதுமக்கள் தரப்பில் கேள்வி எழுப்பியபோது, உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
பிரஸ் காலனி செல்லும் சாலை மட்டுமின்றி, பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் குப்பைகள் தேங்கி கிடப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, குப்பைகளை உடனடியாக அகற்றி, தொடர்ந்து குப்பைகள் தேங்காத வகையில் முறையான தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா?