மதுக்கடையை அகற்றக் கோரி போராட்டம்! – பொதுமக்களுக்கு உணவு வழங்கவில்லை என ஆவேசம்; போலீசாருக்கு மட்டும் உணவா?

அரியலூர் மாவட்டம் சிறுகளத்தூரில், மதுபானக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 25ஆம் தேதி காலை 10 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், போராட்டக்காரர்களுக்கு உணவும் குடிநீரும் வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, போராட்டம் நிறைவடைவதற்கு முன்பாக போலீசார் மற்றும் மதுபானக் கடை ஊழியர்களுக்கு மட்டும் உணவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்காமல், போலீசாருக்கும் கடை ஊழியர்களுக்கும் மட்டும் உணவு வழங்கப்படுவது ஏன்?” என கேள்வி எழுப்பினர்.
இந்த சம்பவம் சிறுகளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.