கோவை கோவில்பாளையம் பகுதியில் வாகன சோதனையின்போது, குட்கா கடத்திச் சென்றதாக கூறப்படும் கார் ஒன்று போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்றது.
இதையடுத்து போலீசார் அந்த காரை சுமார் 40 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்றனர். அப்போது, காரை மடக்கிப் பிடிக்கும் முயற்சியில், காவலர் வேல்முருகன் போலீஸ் வாகனத்தில் இருந்து கடத்தல் காருக்கு தாவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் நடைபெற்ற இந்த துரத்தலில், அவிநாசி அருகே அந்த கார் தடுத்து நிறுத்தப்பட்டது.
காரில் இருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த மூன்று பேர் போலீசாரால் பிடிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்ததாக கூறப்படும் குட்கா பொருட்கள் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரை பணயம் வைத்து தாவிய காவலர்! 40 கி.மீ துரத்தல்… சினிமாவை மிஞ்சிய குட்கா கடத்தல் கும்பல் பிடிப்பு!

What’s your reaction?
Love1
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply