திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தவெக பொதுச்செயலாளர் N. ஆனந்த், தேர்தல் பொறுப்பாளர் அருண்ராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தாராபுரத்தில் உள்ள தேவாலயத்திற்கு வருகை தந்தனர்.
தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையில் பங்கேற்ற தவெக நிர்வாகிகள், கட்சிக்கு மேலும் தொகுதிகள் கிடைக்க வேண்டும் என்றும், நடைபெறவுள்ள இரண்டு இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், திமுக தரப்பினரும் அதே தேவாலயத்திற்கு வந்ததால், ஒரே நேரத்தில் இரு கட்சியினரும் அங்கு திரண்டனர். ஆலயத்திற்குள் ஏற்கனவே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், தவெக மற்றும் திமுக நிர்வாகிகள் வெளியிலேயே காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
பின்னர் பொதுமக்கள் வெளியே வந்ததும், இரு தரப்பினரும் தேவாலயத்திற்குள் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனால் தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரக் களம் மேலும் பரபரப்படைந்துள்ளது.










Leave a Reply