கோவை காளப்பட்டி நேரு நகரில் மது போதையில் இளைஞர்கள் அட்டகாசம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு

கோவை காளப்பட்டி நேரு நகர் பகுதியில், சில வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மது போதையில் அட்டகாசம் செய்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மது போதையில் அவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியதாக தகவல்.
இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.