கோவையில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட நஞ்சப்பா சாலையில் அமைந்துள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, Rapido நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட டெங்கு கொசு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள், ஆட்டோக்களில் ஒட்டப்பட்டு பொதுமக்களிடையே டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் திரு. கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., மாநகர நல அலுவலர் மரு. சுபாஷ்காந்தி, உதவி ஆணையர் திரு. கணேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் வகையில், பொதுமக்களும் தங்கள் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொண்டு, கொசு உற்பத்தியைத் தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேதி: 24.09.2026