1986 முதல் 2026 வரை… விமானத்தில் இந்தியர்களின் துணிச்சல்! – நீரஜா பனோட் முதல் கேப்டன் ஸ்மித் மச்சார் வரை

1986-ல் கராச்சியில் கடத்தப்பட்ட Pan Am Flight 73 விமானத்தில், பயணிகளின் உயிரைக் காப்பாற்றி வீரமரணம் அடைந்தவர் விமானப் பணிப்பெண் நீரஜா பனோட்.
Abu Nidal Organization-ஐச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய 4 பேர் விமானத்தை கடத்திய நிலையில், நீரஜா பனோட் துணிச்சலுடன் செயல்பட்டு நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்ற உதவினார். அவரது நடவடிக்கைகள் 350-க்கும் மேற்பட்ட உயிர்களை காப்பாற்றியதாக அமெரிக்க நீதித்துறை பதிவு குறிப்பிடுகிறது.

இந்நிலையில், 2026-ல் Flydubai FZ1073 விமானத்தில் மற்றொரு பரபரப்பான சம்பவம். விமானம் துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்றபோது, இணை விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை தாக்கியதாகவும், விமானம் திடீரென உயரத்தை இழந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
காயமடைந்த நிலையிலும் கேப்டன் ஸ்மித் மச்சார் காக்பிட் கதவைத் திறக்க உதவியதால், பயணிகளும் பணியாளர்களும் உள்ளே சென்று தாக்கியவரை கட்டுப்படுத்தினர். பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் நகரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 174 பேரும் பாதுகாப்பாக இருந்தனர்.

1986-ல் நீரஜா பனோட்… 2026-ல் ஸ்மித் மச்சார்… விமானப் பேரிடர் நேரத்தில் துணிச்சலை வெளிப்படுத்திய இந்தியர்களின் இரண்டு முக்கிய சம்பவங்கள்!