சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.
காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்வில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறிய முதலமைச்சர் விஜய், பெண் பயணிகளிடம் அவர்கள் செல்லும் இடத்தை கேட்டறிந்து, அவர்களுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டுகளை நேரடியாக வழங்கினார்.
இதன்மூலம், பெண்கள் மற்றும் திருநங்கையர்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் கூடுதல் வகை அரசுப் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மாநகர் மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும், புறநகர் சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கிலோமீட்டருக்கு மேல் செல்லும் மலைப்பகுதி சாதாரண பேருந்துகளும் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
அரசு தகவலின்படி, மொத்தம் 12,695 அரசுப் பேருந்துகளில் இந்த கட்டணமில்லா பயண வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் பேருந்தில் பயணச்சீட்டு வழங்கிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply