நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட இ-செல்லான் அபராதங்களில் சுமார் ₹20,000 கோடி இன்னும் வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிலுவையில் உள்ள போக்குவரத்து அபராதங்களை மின் கட்டணத்துடன் இணைத்து வசூலிக்கும் முறையை பரிசீலிக்கலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு யோசனை தெரிவித்துள்ளது.
அபராதத்தை செலுத்தாதவர்களின் வாகனங்களை பிளாக் லிஸ்ட் செய்வது, வாகன உரிமை மாற்றத்தை தடுக்குவது, RC, PUC உள்ளிட்ட ஆவணங்களின் புதுப்பிப்பை கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளையும் நீதிமன்றம் பரிசீலிக்கலாம் எனக் கூறியுள்ளது.
எனினும், மின் கட்டணத்துடன் அபராதத்தை இணைத்து மின் இணைப்பை துண்டிப்பது தற்போது நடைமுறைக்கு வந்த உத்தரவு அல்ல; இது நீதிமன்றம் முன்வைத்துள்ள ஒரு யோசனை மட்டுமே.










Leave a Reply