தாராபுரத்தில் பரபரப்பு! நாதக வேட்பாளர் கார்த்திகா கைது

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு. கார்த்திகா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீராச்சிமங்கலம் பகுதியில் உரிய அனுமதி இல்லாமல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட முயன்றதாகக் கூறி, காவல்துறையினர் கார்த்திகாவை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, காவல்துறையினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து கார்த்திகாவை காவல்துறையினர் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கார்த்திகா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் கட்சித் தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் பிரசாரம் நிறைவடையும் நேரத்தில் நடைபெற்ற இந்த கைது சம்பவம், தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.