தாராபுரத்தில் மாட்டு வண்டி ஓட்டிய முதல்வர் விஜய்! – வைரலாகும் காட்சிகள்

தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் பி. சத்யபாமாவை ஆதரித்து, முதல்வர் விஜய் நேற்று இறுதிக்கட்ட ரோடு ஷோவில் ஈடுபட்டார்.
பிரசாரப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்த பாரம்பரிய மாட்டு வண்டியில் திடீரென ஏறிய விஜய், அதன் கயிற்றைப் பிடித்து வண்டியை ஓட்டினார்.
விஜய்யின் இந்த எதிர்பாராத செயலைக் கண்ட அங்கு திரண்டிருந்த தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாகக் குரல் எழுப்பினர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.