கோவையின் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களான வெள்ளலூர் பேருந்து நிலையப் பணிகள் மற்றும் மேற்குப் புறவழிச்சாலைத் திட்டத்தை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோவை குடியிருப்போர் முன்னேற்றச் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
மனுவில், வெள்ளலூர் பேருந்து நிலையப் பணிகளை விரைவுபடுத்தி, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், கோவை மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் முக்கியமான மேற்குப் புறவழிச்சாலைப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த இரு திட்டங்களும் கோவையின் போக்குவரத்து வசதி மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமானவை என்பதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக்கொண்டனர்.
கோவை குடியிருப்போர் முன்னேற்றச் சங்கத் தலைவர் கே.ஆர். செல்வகுமார், பொதுச்செயலாளர் கே. ஸ்ரீகாந்த், பொருளாளர் எஸ். சங்கரநாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த மனுவை அளித்தனர்.
மேலும், நல்லாம்பாளையம் கிளைச் செயலாளர் பால்ராஜ், துணைச் செயலாளர் லிங்க பாண்டி, ஆட்டோ தொழிலாளர் அணி மணி, சிவானந்தா காலனி கிளைத் தலைவர் தினேஷ், வளர்ச்சிக் குழுச் செயலாளர் பிரபாகர் மற்றும் வார்டு செயலாளர்கள் பாண்டியன், காட்வின் சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply