கேரளாவின் யானை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்…
‘கஜ கௌஸ்துபம்’ என அன்புடன் அழைக்கப்பட்ட பிரபல யானை பல்லாட்டு பிரம்மதத்தன், அக்டோபர் 4ஆம் தேதி மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் ஏரட்டுப்பேட்டை அருகே மேலம்பாறா பகுதியில், இடியுடன் கூடிய கனமழை பெய்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 45 வயதான பல்லாட்டு பிரம்மதத்தன், திருச்சூர் பூரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோயில் திருவிழாக்களில் பங்கேற்று, யானை ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தைப் பெற்றிருந்தது.
அமைதியான குணம் கொண்ட இந்த யானையின் மறைவு, கேரளா முழுவதும் உள்ள யானை ஆர்வலர்கள் மற்றும் திருவிழா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மின்னல் தாக்கி உயிரிழந்த ‘கஜ கௌஸ்துபம்’! – கேரளாவில் பிரபல யானை பல்லாட்டு பிரம்மதத்தன் சோகம்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply