கொசு வேடமிட்டு நூதன டெங்கு விழிப்புணர்வு! – கர்நாடகாவில் வித்தியாசமான முயற்சி!

கர்நாடக மாநிலம் குந்தபுரா பகுதியில், டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நூதனமான கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பொதுமக்கள் மத்தியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிலர் கொசு வேடமிட்டும், வெள்ளை நிற உடைகளை அணிந்தும், தண்ணீர் தொட்டி போன்ற வித்தியாசமான வடிவங்களிலும் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
“ஐயோ டெங்கு… டெங்கு… டெங்கு வந்துவிட்டால் யாருக்கும் பேதம் பார்க்காது!” என்ற எச்சரிக்கை வரிகளுடன், டெங்கு காய்ச்சலின் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் தண்ணீர் தேங்கிக் கிடந்தால், அதில் கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு பரவும் அபாயம் இருப்பதாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நகைச்சுவையும் நடனமும் கலந்த இந்த நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
தண்ணீர் தேங்குவதைத் தவிர்ப்போம்! கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்துவோம்! டெங்குவிலிருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாப்போம்!