கோவையில் விநோதம்! ராஜஸ்தான் இளைஞரின் அசத்தல் ஐடியா – காரை மாற்றியமைĥத்து நடமாடும் கரும்பு ஜூஸ் கடை!
கோவையில் ஒரு புதுமையான மற்றும் வியக்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது கடின உழைப்பாலும் வித்தியாசமான யோசனையாலும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
கோவை உக்கடம் பகுதியில் இவர் நடத்தி வரும் நடமாடும் கரும்பு ஜூஸ் கடைதான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்!
வழக்கமாக தள்ளுவண்டிகளில் விற்கப்படும் கரும்பு ஜூஸை, இவர் தனது காரையே மாற்றியமைத்து ஒரு முழுமையான கரும்பு ஜூஸ் கடையாக மாட்டியுள்ளார்.
இந்தக் காரின் உள்ளேயே கரும்பு பிழியும் இயந்திரம், ஐஸ் பெட்டி மற்றும் ஜூஸ் தயாரிப்பதற்குத் தேவையான அனைத்து பொருட்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்களுக்குச் சுத்தமான மற்றும் சுவையான கரும்பு ஜூஸ் உடனடியாக வழங்கப்படுகிறது.
சிறப்பு என்னவென்றால், வியாபாரம் முடிந்த பிறகு, இவர் அதே காரை ஸ்டார்ட் செய்து ஓட்டிக்கொண்டு வேறொரு இடத்திற்கோ அல்லது வீட்டிற்கோ எளிமையாகச் சென்றுவிடுகிறார்.
சொந்தமாக ஒரு காரை மாற்றி அமைத்து, சுயமாக உழைத்து முன்னேறும் இந்த ராஜஸ்தான் இளைஞரின் சாமர்த்தியத்தையும், தன்னம்பிக்கையையும் அப்பகுதி மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.









Leave a Reply