கோவை கண்ணப்ப நகர் ரயில்வே ரோடு அருகே, மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் அமைந்துள்ள சண்முகா நகர் பகுதியில், அரசு புறம்போக்கு நிலத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 2006-ஆம் ஆண்டு இப்பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்ட நிலையில், அப்போது வீட்டில் இல்லாத காரணத்தால் பிரியா மற்றும் ரம்யா ஆகியோரின் குடும்பங்களுக்கு மட்டும் மின்சார இணைப்பு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதற்காகப் பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
தற்போது 6 பெரியவர்கள், 8 குழந்தைகள் என மொத்தம் 14 பேர் மின்சார வசதியின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில், இரண்டு குடும்பங்களுக்கும் உடனடியாக மின்சார இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாகத் தொடரும் இந்த அவலநிலைக்கு அதிகாரிகள் விரைவில் தீர்வு காண்பார்களா? என்பதே பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply