குரூபம்பாளையம் மக்களின் அவதி… தீர்வு கோரி தாசில்தாரிடம் மனு!

குரூபம்பாளையம் பகுதியில் அருந்ததியர் சமுதாய மக்கள் வசிக்கும் இடத்தில், ஸ்ரீ வாரி கார்டன் பகுதியில் உள்ள கழிவுநீர் சாக்கடைப் பாதையில் கழிவுநீர் தேங்குவதால், குடியிருப்புப் பகுதிகளில் சுகாதாரக் கேடு ஏற்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட மக்கள் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று தாசில்தாரிடம் மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட தாசில்தார், உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
நீண்டகாலமாகத் தொடரும் இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட்டு, குரூபம்பாளையம் மக்களுக்கு சுகாதாரமான குடியிருப்புச் சூழல் ஏற்படுத்தித் தரப்படுமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.