கோயம்புத்தூர் மாவட்டம், வடக்கு வட்டத்திற்கு உட்பட்ட நெ. 4 வீராண்டி பேரூராட்சி டவுன் பஞ்சாயத்து, வினோபாஜி அறிவொளி நகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாகக் கிடக்கிறது.
இப்பகுதியில் பட்டியல் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 900 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்கள் மருத்துவ அவசர காலத்திற்கு இந்தச் சாலையைப் பயன்படுத்த முடியாமல் தினசரி கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, வீராண்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இப்பகுதி மக்களின் துயரத்தைப் போக்கும் வகையில், சமூக நீதிக் கட்சியின் மாவட்ட செயலாளர் பட்டேல் பாலு தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் முறையான புகார் மனு அளிக்கப்பட்டது.
தங்கள் பகுதி சாலையை உடனடியாக சீரமைத்து, புதிய தார் சாலை அமைத்துத் தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
கோவை மாவட்டம் no. 4 வீரபாண்டி வினோபாஜி அறிவொளி நகரில் குண்டும் குழியுமாக மாறியுள்ள சாலையால் பொதுமக்கள் கடும் அவதி!

What’s your reaction?
Love1
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply