திருப்பூரைச் சேர்ந்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர், முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து வீடு கோரி மனு அளிக்க முயன்றபோது கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் விஜய் வருகை தந்திருந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல், தமக்கு வீடு வழங்கக் கோரி மனு அளிக்க முயன்றுள்ளார்.
ஆனால், முதலமைச்சரைச் சந்திக்க முடியாத சூழலில், சக்திவேல் தரையில் படுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரைக் கைது செய்தனர்.
முதலமைச்சரின் வருகையின்போது, கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் வீடு கோரி மனு அளிக்க முயன்று கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவில் பரபரப்பு! முதல்வரைச் சந்திக்க முயன்ற கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி கைது!

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply