சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ஜெயிலர் 2 திரைப்படம், முதல் நாளிலேயே உலக அளவில் ரூ.125.25 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன!
அக்டோபர் 15ஆம் தேதி வெளியான இப்படம், இந்தியாவில் மட்டும் ரூ.59.70 கோடி நிகர வசூலைப் பதிவு செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மொத்த வசூல் ரூ.70.25 கோடியாகவும், வெளிநாடுகளில் ரூ.55 கோடியாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகளவில் மொத்தம் ரூ.125.25 கோடி வசூலைப் பெற்றுள்ளது ஜெயிலர் 2.
இதன் மூலம், தமிழ் சினிமாவில் முதல் நாள் உலகளாவிய வசூலில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது ஜெயிலர் 2!
ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் ரூ.151.10 கோடியும், விஜய்யின் லியோ திரைப்படம் ரூ.142 கோடியும் முதல் நாளில் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த இரண்டு படங்களுக்கும் அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது ஜெயிலர் 2.










Leave a Reply