தமிழ் இசையுலகின் மூத்த இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா அவர்களின் மறைவு, திரையுலகினரையும் இசை ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தேவா அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
தேவா அவர்களின் மெல்லிசைகள் பல தலைமுறையினரின் இதயங்களைத் தொட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், அவரது இசை வரும் காலங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும் என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தேவா அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், அவரது ஆன்மா அமைதியில் நிலைபெறட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தேவா அவர்கள் மறைந்தாலும், அவர் இசைத்த பாடல்களும், ரசிகர்களின் மனதில் பதித்த இசை நினைவுகளும் என்றும் மறையாது!










Leave a Reply