ஊழியர்களிடம் அமைச்சர் சம்பத்குமார் கடும் அதிருப்தி!

மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வடிகால் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை எனக் கூறி, மாநகராட்சி ஊழியர்களிடம் அமைச்சர் சம்பத்குமார் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
குடியிருப்புகளுக்குள் புகுந்த மழை வெள்ளத்தால் பொதுமக்கள் சிரமங்களைச் சந்தித்து வரும் நிலையில், மழைநீரை அகற்றி இயல்பு நிலையை மீட்டெடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது!
கோவை மழை வெள்ளம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.