மும்பையில் பிரபல நடிகர் டைகர் ஷெராப் வாகனத்தை குறிவைத்து துப்பாக்கிச்சூடு!

மும்பையில் பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் சென்ற வாகனத்தை குறிவைத்து மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையின் ஜுஹு பகுதியில் உள்ள புஷ்பா பூங்கா அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள், நடிகர் டைகர் ஷெராபின் வாகனத்தை நோக்கிப் பலமுறை துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் நடிகர் டைகர் ஷெராப் காயமின்றி உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது ஓட்டுநர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.