கோவை மாவட்டம், தெலுங்குபாளையம் பேரூர் மெயின் ரோட்டில், நீலு மருத்துவமனை அருகே அமைந்துள்ள நம்ம ஊரு ஆட்டோ ஸ்டாண்டில் இன்று ஆயுத பூஜை விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
சுந்தரம், சதீஷ் மற்றும் கார்த்தி ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து கொண்டாடினர்.
இதற்கிடையே, தமிழக அரசின் இலவசப் பேருந்து பயணத் திட்டத்தால் தங்களது வருமானம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே பல்வேறு செலவுகளைச் சமாளித்து வரும் நிலையில், தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள், ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இவர்களின் முக்கிய வேண்டுகோளாக உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply