உதகை அருகே கூண்டில் சிக்கிய கரடி! ஆக்ரோஷமாக உறுமியதால் பரபரப்பு!

கிராமப் பகுதியில் கரடி சுற்றித்திரிவதால் அச்சமடைந்த பொதுமக்கள், அதைப் பிடிக்க வனத்துறையினருக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, வனத்துறையினர் வைத்த கூண்டில் இன்று காலை கரடி சிக்கியது. கூண்டில் சிக்கிய கரடி, தலையை வெளியே நீட்டி ஆக்ரோஷமாக உறுமியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூண்டின் மீது பிரம்மாண்ட வலையை விரித்தனர் வனத்துறையினர்.
மேலும், கூண்டில் சிக்கிய கரடியை முதுமலை வனப்பகுதியில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளிலும் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கிராமப் பகுதியில் சுற்றித்திரிந்த கரடி கூண்டில் சிக்கியதால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்!