ஆளுநர் வருகைக்காகத் தடுத்து நிறுத்தப்பட்ட கர்ப்பிணி மனைவியின் கணவர் – நடுரோட்டில் அமர்ந்து போராட்டம்!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், கர்ப்பிணி மனைவியை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நபரை, ஆளுநரின் வருகையை முன்னிட்டு காவல்துறையினர் சாலையில் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசர நேரத்தில், போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டதால் அந்த நபர் கடும் அதிருப்தி அடைந்தார்.
இதையடுத்து, நடுரோட்டிலேயே அமர்ந்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, “சாலை வரியை நான் செலுத்துகிறேன். மணிக்கணக்கில் பொதுமக்களின் பயணத்தைத் தடுக்க இவர் யார்?” எனக் கேள்வி எழுப்பினார்.
ஆளுநரின் வருகைக்காகப் பொதுமக்களின் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அவசர மருத்துவத் தேவைகளுக்காகச் செல்வோருக்கும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.










Leave a Reply