கோயம்புத்தூர் | 21.10.2026
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு, மாநகராட்சி ஆணையாளர் திரு. கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில், வடகிழக்கு பருவமழையையொட்டி மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையாளர் திருமதி ர. சரஸ்வதி, மாநகரத் தலைமைப் பொறியாளர் திரு. விஜயகுமார், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் ஆய்வுக் கூட்டம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.










Leave a Reply