பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதிகளில் மழை வெள்ள முன்னெச்சரிக்கைப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!
கோவை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, மழை வெள்ள பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை வெள்ள முன்னெச்சரிக்கைப் பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மழைக்காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்குவதைத் தடுக்கவும், மழைநீர் சீராக வெளியேறுவதற்கான வழிமுறைகளை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், மழை வெள்ளத்தால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், கோவை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.










Leave a Reply