திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கொசவபட்டி சாலை பகுதியில்
கனிமவளத்துறை அதிகாரி ஆஞ்சலோமெர்சி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது
அவ்வழியாக வந்த 3 டிப்பா் லாரிகளை நிறுத்தியபோது லாரியை ஓட்டி வந்த டிரைவர்கள் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
கனிமவளத்துறையினர் லாரிகளை சோதனை மேற்கண்ட போது அதில் சட்டவிரோதமாக போதிய ஆவணங்களின்றி எம்-சாண்ட் கொண்டு வந்தது தெரியவந்ததை தொடர்ந்து கனிமவளத் துறையினர் மூன்று லாரிகளையும் பறிமுதல் செய்து வடமதுரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் முத்துப்பாண்டியன்.










Leave a Reply