கோவை குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில், குடியிருப்போர் நலச்சங்கத் தலைவரை நாற்காலியில் அமர விடாமல் அவமதித்ததாக அதிகாரி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சாதியப் பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறி, பாதிக்கப்பட்டவர் கோவை மாநகரக் காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.
கோவை சரவணம்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ப. இளங்கோவன், கடந்த 21ஆம் தேதி வீடுகள் தொடர்பான கோரிக்கைக்காக செல்வபுரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது எஸ்டேட் அதிகாரியைச் சந்திக்கச் சென்ற அவர், அதிகாரி தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததால் எதிரே இருந்த காலி நாற்காலியில் அமர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவரை நாற்காலியில் அமர வேண்டாம் என அதிகாரி தடுத்து அவமதித்ததாக இளங்கோவன் புகார் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இன்று கோவை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் மனு அளித்துள்ளார்.
அரசு அலுவலகத்தில் சாதியப் பாகுபாடு காட்டப்பட்டதாக எழுந்துள்ள இந்தப் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது









Leave a Reply