கோவை காந்திபுரம் சிக்னல் பகுதியில், ரத்தினம் கல்லூரி சார்பில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
குறிப்பாக, தலைக்கவசம் அணிதல், சீட் பெல்ட் அணிதல், போக்குவரத்து சிக்னல்களை மதித்தல், அதிவேகமாக வாகனங்களை இயக்குவதைத் தவிர்த்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
சாலை விபத்துகளைக் குறைத்து, உயிரிழப்புகளைத் தடுக்க அனைவரும் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தினர்.
கோவை காந்திபுரம் சிக்னலில் ரத்தினம் கல்லூரி சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply