தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில், அக்டோபர் 30ஆம் தேதி நடை ரோந்து மேற்கொண்ட அவர், கடைவீதிகளில் நிலவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து நிலவரம் குறித்து ஆய்வு செய்தார்.
தீபாவளி பண்டிகைக்காகப் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு அதிக அளவில் பொதுமக்கள் கடைவீதிகளுக்கு வருகை தருவார்கள் என்பதால், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் அச்சமின்றி பொருட்கள் வாங்கிச் செல்லும் வகையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply