
கோவையில் RIT – ரீடர்ஸ் இந்தியா தமிழ் சார்பில் நடைபெற்ற “ரியல் ஹீரோ அவார்ட்ஸ் 2.0” விருது மற்றும் பாராட்டு விழா ரீடர்ஸ் இந்தியா தமிழ் நிறுவனர் ரஞ்சித்குமார் தலைமையில் சாய்பாபா காலனியில் உள்ள ஜேகே ஹோட்டல் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் இருந்து சிறந்த திறமையாளர்களை தேர்ந்தெடுத்து கவுரவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில், இந்திய திரைப்பட இயக்குநர்களான பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் ஆகியோருக்கு சிறப்பு பாராட்டு வழங்கப்பட்டது.
திரையுலகில் தங்களது தனித்துவமான படைப்புகளால் பல தலைமுறை ரசிகர்களை கவர்ந்த இருவரின் கலைப்பணிகளை பாராட்டும் வகையில் இந்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியை தொடர்ந்து மௌன ராகம் கவிதை புத்தகத்தின் வெளியிட்டு விழா நடைபெற்றது இதன் சிறப்பு விருந்தினர்களாக தேசிய உரிமைகள் கழகத்தின் தலைவர் மருத்துவர் M. கதிர்வேல், கூடலூர் நகராட்சி தலைவர் A. அறிவரசு, ஸ்ரீ பாலா மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் T. அருண்குமார், கிரிஸ்டல் ப்ரோ நிர்வாக இயக்குநர் A. ஆண்ட்ரூ டேங்கல், மௌன ராகம் கவிதை புத்தகத்தின் ஆசிரியர் முனைவர் K. ஜெயக்குமார், திருப்பூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் B. கார்த்திகை வாசன் ஆகியோர் இணைந்து புத்தகத்தை வெளியிட்டு விழாவை சிறப்பித்தனர்
இந்நிகழ்ச்சியில்விஜய் டிவி கதாநாயகி ஷோ டைட்டில் வின்னர்களான M. ரூபினா மற்றும் M. ரூபிசீனா உட்பட
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்கள் கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சியில் சாதனையாளர்களை கவுரவிக்கும் வகையில் சிறப்பு விருதுகள் மற்றும் பாராட்டுகள் வழங்கப்பட்டது
மேலும் சிறந்த திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களை கவுரவிப்பதே இந் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் ஆகும்









Leave a Reply