நீலகிரியில் 100 அடி பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்த மரம் ஏற்றிய லாரி! – கோத்தகிரி அருகே பரபரப்பு!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மரங்களை ஏற்றிச் சென்ற லாரி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது!
கட்டபெட்டு பகுதியில் இன்று காலை மரங்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, அதிக பாரம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சுமார் 100 அடி பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து உருண்டது.
இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்தில் ஓட்டுநருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.