மீண்டும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி!

ஒரே நாளில் சுமார் ரூ.80,000 கோடி சொத்து மதிப்பு உயர்வு!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 12 சதவீதம் வரை அதிரடியாக உயர்ந்ததால், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 10.5 சதவீதம் அதிகரித்து ரூ.8.41 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி.
மேலும், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 23-வது இடத்திற்கும் முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
ஒரே நாளில் ரூ.80 ஆயிரம் கோடி உயர்வு… மீண்டும் ஆசியாவின் நம்பர் ஒன்!