கோவையில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 16ஆம் தேதி தீர்ப்பு!

கோவை மாவட்டம், சூலூர் அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், வரும் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற இந்தக் கொடூர சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் கார்த்திக் மற்றும் மோகன் ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், வழக்கு விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், வரும் 16ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
சிறுமிக்கு நீதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.