ஒரு வாரத்திற்கும் மேலான தேடுதல் வேட்டை… பாதுகாப்பாக மீட்கப்பட்ட பெண் புலி!

அசாம் மாநிலத்தில் வழிதவறிச் சென்ற 3 வயது பெண் புலி, நீண்ட தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு வனத்துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.
பக்ஸா புலிகள் காப்பகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட சில நாட்களிலேயே, இந்தப் பெண் புலி அசாம் மாநிலத்தின் கோக்ராஜார் பகுதிக்குள் வழிதவறிச் சென்றது.
இதையடுத்து, ஒரு வாரத்திற்கும் மேலாக வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், கோக்ராஜார் பகுதியில் புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
தற்போது, மீட்கப்பட்ட பெண் புலியை டூயார்ஸ் பகுதியில் அமைந்துள்ள அதன் சொந்த வாழிடமான பக்ஸா புலிகள் காப்பகத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்லும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வனத்துறையினரின் துரிதமான செயல்பாட்டால், இளம் பெண் புலி பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.