கோவையில் 4,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் ஊராட்சி நிர்வாகம்!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியம், தென்னமநல்லூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், பசுமையைப் பாதுகாக்கும் வகையில் சிறப்பான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஊராட்சி அலுவலகத்தின் கூடுதல் நர்சரியில் சுமார் 4,000 மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மரக்கன்றுகளை வளர்த்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் இந்த முயற்சி பொதுமக்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
பசுமையான கிராமம்… வளமான எதிர்காலம்!