வெறும் 100 ரூபாய் சில்லறை தகராறு… ஓடும் பேருந்தில் இருந்து கீழே தள்ளப்பட்ட பெண் நடத்துநர் உயிரிழப்பு!

தெலுங்கானாவில் டிக்கெட் கட்டணம் மற்றும் சில்லறை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் விபரீதத்தில் முடிந்துள்ளது.
பேருந்தில் பயணம் செய்த பெண் பயணிக்கும், 24 வயதான பெண் நடத்துநர் பிரவாலிகாவுக்கும் இடையே 100 ரூபாய் சில்லறை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த பெண் பயணி, ஓடும் அரசுப் பேருந்தில் இருந்து நடத்துநர் பிரவாலிகாவைக் கீழே தள்ளியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வெறும் 100 ரூபாய் சில்லறை பிரச்சினையில் 24 வயது பெண் நடத்துநர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.