கோவையில் மகளிர் ஆட்டோ தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசாக சேலை வழங்கி கௌரவிப்பு!

கோவை சிவானந்தா காலனி KKMS ஆட்டோ ஸ்டாண்டில், கோவை குடியிருப்போர் முன்னேற்ற சங்கம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகளிர் ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு சேலைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் கே.ஆர். செல்வகுமார் தலைமை தாங்கினார். எஸ். சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார். துணைப் பொதுச் செயலாளர் லோகநாதன் மகளிர்களுக்கு சேலைகளை வழங்கினார்.
மேலும், கோவை மாநகரை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என விழாவில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக, கோவை குடியிருப்போர் முன்னேற்ற சங்கம் சார்பில் பொதுமக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.