கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, தரைக்கடை வியாபாரிகளிடம் கட்டாயப் பண வசூலில் ஈடுபட்ட நபரை தவெக நிர்வாகிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக தரைக்கடைகள் அமைத்துள்ள வியாபாரிகளிடம், தவெக பெயரைக் கூறி தலா 3,500 ரூபாய்க்கும் மேல் அந்த நபர் வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் சம்பவ இடத்திற்குச் சென்று, பணம் வசூலில் ஈடுபட்ட நபரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து தவெகவினர் அளித்த புகாரின் பேரில், அந்த நபரைக் கைது செய்த போலீசார், அவர் வேறு யாரிடமெல்லாம் பணம் வசூலித்துள்ளார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில் தவெக பெயரைக் கூறி தரைக்கடை வியாபாரிகளிடம் ரூ.3,500-க்கு மேல் கட்டாயப் பண வசூல்!

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply